tamilnadu

img

வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள 710 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்
மொத்த காலியிடங்கள்
: 710
பணி: I.T. Officer (Scale-I) - 44 
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகியவற்றில் 4 ஆண்டு பொறியியல், தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Agricultural Field Officer (Scale I) - 516
தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால்வள அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம். சந்தைப்படுத்தல், கூட்டுறவு - வங்கி, வேளாண்-வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Rajbhasha Adhikarai (Scale I) - 25
தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது  ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale I) - 10 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் (எல்எல்பி)  பெற்று பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: HR/Personnel Officer (Scale I)  - 15
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Scale I) - 100
தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்கி பிரிவில் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங்க் பிரிவில் இரண்டு ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2022 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டண்ததை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். இங்கே கிளிக் செய்யவும்.