tamilnadu

img

ஈழத்தமிழர்களுக்கு அதிமுக துரோகம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை, டிச. 18- குடியுரிமை திருத்தச் சட்டம் நிறை வேறக் காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தை முற்றுகையிட புதனன்று (டிச.18) மனித நேய மக்கள் கட்சியி னர் ஆயிரக்கணக்கானோர் சென்னை பட்டினப்பாக்கம் சாந்தோம் அருகி லிருந்து பேரணியாக சென்றனர்.  அவர்களை சிறிது தூரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பார பட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில், மாநிலங்களவையில் நிறைவேறுவ தற்கு அதிமுகவின் வாக்குகளே காரணம். சட்ட சபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானங்களைக் கொண்டு வந்த போதெல்லாம் அவர் ஆற்றிய உரைகள் மத்திய அரசை உரசிப் பார்த்தன. ஈழத் தமிழர்களுக்கு ஆதர வாகத் கொண்டு வந்த தீர்மா னங்களை மேஜையைத் தட்டி ஆதரித்த பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்காத மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள்.  நாட்டை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் துண்டாடும் நோக்கத்து டன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து அதிமுக சிறுபான்மை முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளதைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுக்கிறோம் என்றார். இதில் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப் உள்ளிட்ட ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.