tamilnadu

img

ஜெ.அன்பழகனின் உடல்நிலை: மு.க. ஸ்டாலின் விசாரிப்பு

சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அன்பழகனுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவினர்களான அம்மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகமது ரேலா, இளங்குமரன் ஆகியோரிடத்தில், அவரது உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப் 
பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். திமுக தலைவருடன் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார்.

;