tamilnadu

img

தொழில் நுட்ப கதிர்

இந்தியாவில் ‘கூகுள் வாலெட்’ அறிமுகம்!

இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ‘கூகுள் வாலெட்’ எனும் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் மாநாட்டில் ‘கூகுள் வாலெட்’ செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தச் செயலி தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் டிஜிட்டல் வடிவில் போர்டிங் பாஸ் (Boarding Pass), சினிமா டிக்கெட்கள் (Movie Tickets), பொது போக்குவரத்து டிக்கெட்கள் (Public Transport Tickets), கிஃப்ட் கார்டுகள் (Gift Cards), டிஜிட்டல் கீஸ் (Digital Keys) போன்றவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். வங்கி கார்டுகளை (Debit & Credit Cards) சேமித்துக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள கூகுள் வாலெட் செயலியில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி வழங்கப்படவில்லை.

கூகுள் வாலெட் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் ‘Add Items’ மூலம் பாஸ்கள், டிக்கெட்டுகள் அல்லது கிஃப்ட் கார்டுகளை நேரடியாக ஸ்கேன் செய்து ‘Add to Wallet’ கிளிக் செய்து சேமித்துக்கொள்ள முடியும். மேலும், ஜிமெயிலுக்கு வரும் டிக்கெட் சார்ந்த தகவல்களை தானாகவே இந்த செயலியில் சேமித்துக் கொள்ள முடியும். 

கூகுள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷனில் ‘சர்க்கிள் டு சர்ச்’ அம்சம்!

கூகுள் குரோம் பயனர்களுக்கென டெஸ்க்டாப் வெர்ஷனில் (Desktop Version) ‘சர்க்கிள் டு சர்ச்’ (Circle-to-Search) அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூகுள் குரோம் தனது பிரௌசரில் உள்ள கூகுள் லென்ஸை (Google Lens) மேம்படுத்தி, அதனை சர்க்கிள் டு சர்ச் அம்சமாக அறிமுகம் செய்ய உள்ளது. ‘சர்க்கிள் டு சர்ச்’ அம்சம் மூலம் ஒரு படத்தையோ (Image) அல்லது ஒரு வார்த்தையையோ (Text) வட்டமிட்டால், அதன் பொருள் மற்றும் விவரங்களை கூகுள் குரோம் வழங்கிவிடும். இந்த அம்சமானது கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் கூகுள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வாட்ஸ்அப்பில் அழைப்பில் ‘கால் பாரிங்’ வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் புதிதாக ‘வாய்ஸ் கால் பாரிங்’ (Audio Call  Barring) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கால் பாரிங் என்பது உங்களின் மொபைலில் தேவையில்லாத இன்கம்மிங் கால் மற்றும் அவுட்கோயிங் கால்களை தடுக்கப் பயன்படுகிறது. கால் பாரிங் மூலம் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணையோ அல்லது அனைத்து எண்களையோ பிளாக் செய்ய முடியும். 

இந்த கால் பாரிங் வசதி அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது வாட்ஸ்அப் அழைப்பிலும் சோதனை முறையில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.