இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின் பேரவைக்கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 1) கிண்டியில் நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி தலைமையில் நடைபெற்ற இப்பேரவையில் துணைச்செயலாளர் எம்.விஜயகுமார் பேசினார். மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.பழனி ஆகியோர் உடன் உள்ளனர். இந்தப் பேரவையில் சங்கத்தின் தலைவராக இ.பொன்முடி, செயலாளராக எம்.விஜயகுமார், பொருளாளராக குலசேகரபாண்டியன், துணைத்தலைவர்களாக பாண்டுரங்கன், மாரியப்பன், துணைச்செயலாளர்களாக குமரன், மணிமாறன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.