tamilnadu

img

விஜயகாந்த் சிலை திறப்பு

சென்னை, ஆக.25- தேமுதிக மறைந்த தலைவர் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாளை யொட்டி, ஞாயிற்றுக் கிழமை (ஆக.25) சென்னை கோயம் பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய காந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர், விஜயகாந்தின் முழு  உருவ வெண்கலச் சிலையை  பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தலைமை அலு வலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும்” என்று தெரிவித்தார்.

ஒரே இடத்தில் ஏராளமான கூடிய தால் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட் டது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் விஜயகாந்தின் இரண்டா வது மகன் சண்முக பாண்டியன் மயக்க மடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.