tamilnadu

img

தமிழ்நாட்டில் பிரச்சாரம் துவக்கினார் சீத்தாராம் யெச்சூரி

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாட்டில் 3 நாள் சூறாவளிப் பிரச்சாரத்தைத் துவக்கினார். ஏப்ரல் 11 வியாழனன்று மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். புரசைவாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், வேட்பாளர் தயாநிதி மாறனின் கரங்களை உயர்த்தி சீத்தாராம் யெச்சூரி வாக்கு கேட்டார்.  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர்  ஆர்.பிரியா, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்ட  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.