tamilnadu

img

குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துக... சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை.....

சென்னை:
வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய் யும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ஏஜென்சிகள் அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத் தப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மற்றும் விநியோக பணியாளர்கள் முன்னேற்ற நல தொழிற்சங்கத்தின் முதலாவது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பேரவையில், எல்பிஜி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அந்தந்த ஏஜென்சிகள் அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ மற்றும் பிஎப் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரவைக்கு மாநிலத் தலைவர் எம்.நாகபாண்டி தலைமை தாங்கினார். பொருளாளர் பி.டி.தாஸ் கொடியேற்றினார். மாநிலச் செயலாளர் டி.சுகனேஷ்வரன் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.சந்திரசேகர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பேரவையை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் கவுரவ தலைவர் வி.குப்புசாமி கோரிக்கைகளை முன் மொழிந்து பேசினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் துணைச் செயலாளர் ஏ.அருண்ஜோஷ்வா நன்றி கூறினார்.

நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக வி.குப்புசாமி, செயல் தலைவராக எம்.நாகபாண்டி, செயலாளராக டி.சுகனேஷ்வரன், பொருளாளராக பி.டி.தாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

;