tamilnadu

img

நாளைய மனிதச் சங்கிலியில் விதொசவும் இணைகிறது

சென்னை:
மத்தியஅரசு செயல்படுத்த துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக  ஜூன் 12-ல் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் விதொசவும் இணைகிறது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை சீர்குலைத்து காவிரி டெல்டா மாவட்டங்களை  பாலைவனமாக்கி லட்சக்கணக்கான விவ சாயிகள் - விவசாய தொழிலாளர்களை நடுத்தெருவிற்கு கொண்டு வர துடிக்கும் பாஜக தலைமையிலான மோடி அரசையும், மௌனம் காக்கும் அதிமுக அரசையும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமீபத்தில் மரக்காணம் முதல் வேளா ங்கண்ணி வரை மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளை துவங்கி உள்ளது. காவிரி படுகை என்பது முழு விவசா யம் நடைபெறும் பகுதியாகும். கடந்த 4,5 ஆண்டுகாலம் போதுமான மழை பெய்யாத தால் அப்பகுதி விவசாயம் தள்ளாடி வருகிறது. விவசாய தொழிலாளர்க ள் சங்கம்,விவசாய சங்கங்கள் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவித்து, சிறப்பு நிதிகள் சீரானநீர்பாசனம் உள்ளட்டவற்றைச் செயல்படுத்தி தமிழ்நாட்டில் நெற்களஞ்சியத்தை பாதுகாத்திட வேண்டும் என போராடி வரு கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு வடக்கேபாண்டிச்சேரியில் துவங்கி தெற்கே மன்னார் வரை நிலத்தில் 25,000 ச.கிலோ மீட்டரும், கடலில் 30,000 ச.கிலோ மீட்டரும் கொண்ட காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது.

அப்படி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பூமிக்கு அடியில் 3 கிலோ மீட்டர் வரை நூற்றுக்கணக்கான ஆழ்குழாய் ராட்சத கிணறுகள் அமைத்து நிலத்தடிநீரை சூறையாடுவது மட்டுமல்ல, அதனால் நமது விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். விவசாயம் மோடி அரசால் அழியும் போது அதை முழுமையாக நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாய தொழி லாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த பேரழிவுக்கு மோடி சூட்டியிருக்கும் பெயர் வளர்ச்சி. அந்த வளர்ச்சி பாதையை கேள்விக்குள்ளாக்காதவரை இந்த அழிவுப் பாதையிலிருந்து நமது பகுதியை பாதுகாக்க முடியாது என விவசாய தொழிலாளர்கள் சங்கம் டெல்டா பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் துவங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் 12.6.19 மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் வரை நடத்தவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் பங்கேற்கிறது.இவ்வாழ்வாதாரப் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

;