tamilnadu

img

வீட்டுக் கடன் திருவிழா சென்னையில் தொடங்கியது

சென்னை, மார்ச் 1- கிரெடாய் சென்னை மண்டலம் சார்பில் தி.நகர்,  விஜயா மகாலில் 3 நாள்  வீட்டுக் கடன் மேளா வெள்ளி யன்று  (மார்ச் 1) துவங்கியது.        விரைவில் நடைபெற உள்ள  சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியான ‘பேர்ப்ரோ 2024’-ன் முன்னோட்டமாக இந்த கடன் வழங்கும் திருவிழா நடைபெறுகிறது.

16வது ஆண்டாக  இந்தக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று தாங்கள் விரும்பும் சொத்துக்களை வாங்க தங்களுக்கான கடன் தகுதி மற்றும் கடனுக்கான அனுமதி ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் வங்கி களிடமிருந்து பெறுவ தற்காக இந்த கடன் திருவிழா  நடைபெறுகிறது. வீட்டுக் கடன் மேளாவை கிரெடாய் தேசிய துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன், முன்னாள் தலைவர்கள், கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன், பேர்ப்பரோ 2024 ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பக்கீர் முகமது, கிரெடாய் சென்னை செயலா ளர் க்ருதிவாஸ் மற்றும் வங்கி மேலாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

பிரத்தியேக சலுகைகள்,  தள்ளுபடிகள் ஆகியவை யும் இந்த கடன் மேளாவில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு வீட்டுக் கடன் மேளாவில் எஸ்பிஐ, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் எல்ஐசி எச்எப்எல் ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன என்று கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் கூறினார்.