tamilnadu

img

வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

புதுதில்லி தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது புகழ்பெற்ற வர லாற்று ஆய்வாளர் பேராசிரியர் இர்பான் ஹபீப்  மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தில்லி மாநிலச் செயலாளர் அனுராக் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை: “தில்லி பல்கலைக்கழகத்தில் வலது சாரிகள் சார்பில் இலக்கிய விழா நடை பெற்றது. வெறுப்புமிக்க கருத்துக்களு டன் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாற்றாக, ஜனநாயக மற்றும் முற்போக்கு நிகழ்வாக “மக்கள் இலக்கிய விழா – சமத்துவத் திருவிழா” நடைபெற்றது. பல்கலைக்கழ கங்களில் நிலவும் பாகுபாடு மற்றும் நிறுவன ரீதியிலான துன்புறுத்தல் களுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி - UGC)சார்பில் வலுவான விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும், “ரோஹித் சட்டம்” இயற்றப்பட வேண்டும் என்றும் இந்த விழா வலியுறுத்தியது. ஆர்எஸ்எஸ் - பாஜக ஆனால், திடீரென இந்நிகழ்ச்சி யின் போது புகுந்த இந்துத்துவா குண்டர்கள் சமத்துவ திருவிழா நிகழ்வைச் சீர்குலைத்ததுடன், பேரா சிரியர் இர்பான் ஹபீப் மீது உடல் ரீதியாகத் தாக்குதல் (தண்ணீருடன் கூடிய குப்பை தொட்டி வீசப்பட்டது) நடத்தியுள்ளனர். இந்தச் செயல் ஒரு மூத்த, உலகறிந்த கல்வியாளர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம் மற்றும் பல்கலைக்கழக வளாகத் திற்குள் இருக்கும் ஜனநாயக உரிமை கள் மீதான நேரடித் தாக்குதலாகும். வரலாறு குறித்த அறிவியல் பூர்வ மான மற்றும் சான்றுகள் அடிப்படை யிலான புரிதல்கள் பரவுவதை தடுப்பது மற்றும் அத்தகைய குரல்களை ஒடுக்கு வதையே இத்தகைய தாக்குதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு எச்சரிக்கை விடுக்கிறது. வரலாற்றுத் திரிபு குறித்து பேராசிரியர் ஹபீப் நிகழ்த்தவிருந்த உரையைத் தடுக்க முயன்றது, பல்கலைக்கழகங்களை விமர்சன ரீதி யான ஆய்வுக் கூடங்களாக செயல்பட விடாமல், வலதுசாரி சித்தாந்தத்திற்கு அடிபணியும் மையங்களாக மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். பேராசிரியர் ஹபீப்பின் துணிச்சல், நிதானம் மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். தாக்கு தலுக்கு மத்தியிலும், அவர் தனது உரை யைத் தொடர்ந்ததோடு அங்கிருந்த மாணவர்களையும் உற்சாகப்படுத்தி னார். வன்முறை மற்றும் மிரட்டல்கள் மூலம் ஜனநாயகக் கருத்துக்களை நசுக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மிரட்டல்களுக்கான களமாக மாறக்கூடாது இந்தத் தாக்குதலுக்குக் காரண மானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் கோருகிறது. மேலும் பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக நிகழ்வுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் உறுதியுடன் கையாளப் பட வேண்டும். நாட்டின் மற்ற பல்கலைக்கழ கங்களைப் போலவே, தில்லி பல் கலைக்கழகமும் விவாதங்கள் மற்றும் உரையாடல்களுக்கான இடமாகத் திகழ வேண்டுமே தவிர, வன்முறை மற்றும் மிரட்டல்களுக்கான களமாக மாறக்கூடாது. இத்தகைய வகுப்பு வாத மற்றும் பாசிசப் போக்குகளை ஒன்றிணைந்து எதிர்க்குமாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்  மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.