ஆஷா நிவாஸ் சமூக சேவை மையம் ஊசுளு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சைதாப்பேட்டை, கோதா மேடு பகுதியிலும் திருவள்ளுவர் நகர் கல்லுக் குட்டை பகுதியிலும் ஒன்றரை ஆண்டு காலமாக பேரிடர் திறனாக்கல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆஷா நிவாஸ் முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் சகோதரி லில்லி ஜோசபின் வழிகாட்டுதல் படி மேற்கண்ட இரண்டு இடங்களிலும், “தூய்மையே செழுமை” என்னும் வீதி நாடகத்தின் வழியாக பகுதி மக்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறது. ஆஷா நிவாஸின் சிற்பி கலைக் குழுவினர் சூசையா தலைமையில் இந்த வீதி நாடகங்களை நடத்தி வருகின்றனர்.