tamilnadu

img

“பாஜக நாட்டிற்காக எதுவும் செய்யவில்லை”

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை யான காயத்ரி ரகுராம் கடந்த ஜன வரி மாதம், கட்சிக்குள் பெண் களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி  பாஜகவில் இருந்து விலகினார். பாஜக வில் இருந்து விலகிய பின்பு காங்கிரஸ்,  திமுக உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும், பாஜக விற்கு எதிராகவும் பல்வேறு கருத்துக் களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பாஜக நாட்டிற் காக எதுவும் செய்யவில்லை, எல்லா வற்றிலும் தோல்வி என காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் குற்  றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில்,”பாஜக தங்களைப்  பற்றியோ, அவர்களின் சாதனைகளைப் பற்றியோ, இந்துக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றியோ எதுவும் சொல்ல முடியாது. ஏனென் றால் பாஜக நாட்டிற்காக எதையும் செய்ய வில்லை, தோல்வியடைந்தனர். நாடாளு மன்ற தாக்குதல் விவகாரம், அமலாக்கத்  துறை அதிகாரி அங்கித் திவாரி விவ காரம், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த  விவகாரம், ஆருத்ரா மோசடி விவகாரம்,  பாஜக தமிழக ரவுடிகள் விவகாரம், ஒன்  றிய அரசு வெள்ள நிவாரண தமிழக நிதி  விவகாரம் என எதுவும் சொல்ல முடியாத நிலையில், இதனை திசைத்திருப்ப பெரி யார், நேரு, இந்திரா காந்தி, சோனியா  காந்தி போன்றவர்களைப் பற்றி கேலி  செய்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள்” என கூறியுள்ளார். 

பன்றியின் முகத்தோடு சேர்த்து பெரி யாரை இழிவுபடுத்தும் நோக்கில் பாஜக வெளியிட்ட கார்ட்டூனை டேக் செய்து காயத்ரி ரகுராம் பாஜகவை தனது விமர்  சனங்களால் பந்தாடியுள்ளார். காயத்ரி  ரகுராமின் இந்த விமர்சனம் சமூகவலைத்  தளங்களில் வைரலாகி வருகிறது.