tamilnadu

மரணத்தை மறைக்கும் அரசு

சென்னை, ஜூன் 5 - கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும், மாநகராட்சியும் உண்மை யான புள்ளி விவரங்களை கொடுக்காதது தெரிய வந்துள்ளது. சென்னையில் 18 ஆயிரத்து 693 பேர்  பாதிக்கப்பட்டு, 9 ஆயிரத்து 459 பேர் குண மடைந்துள்ளதாகவும், 9 ஆயிரத்து 66 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 167 பேர் இறந்ததாகவும் வியாழனன்று (ஜூன்4) தமிழக அரசு தகவல் வெளியிட்டது. இதில்  இறந்தவர்கள் தொடர்பாக அரசு தரும் புள்ளிவிவரத்திற்கும், மாநகராட்சி தரும் புள்ளி விவரத்திற்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளது.

ஜூன் 3 அன்று வரை சென்னையில் 158 பேர் என்றும், ஜூன் 4ந் தேதி இந்த எண்ணிக்கை 167ஆக உயர்ந்துள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. ஆனால் மாநகராட்சி செய்தி யில் ஜூன் 3 அன்று 139 என்றும், ஜூன் 4ந் தேதி 166 எனவும் குறிப்பிடப்பட்டுளளது. அதாவது சென்னையில் ஒரேநாளில் 27 பேர் இறந்ததாக மாநகராட்சி கணக்கு  காட்டுகிறது. ஆனால் அரசு 11 பேர்  இறந்துள்ளதாக கூறுகிறது. இந்த முரண்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள்  பல்வேறு சந்தேகங்களை எழுப்பு கின்றனர்.

சென்னையில் கொரோனா தொற்றால்  சுமார் 400 பேர் வரை இறந்திருப்பதாகவும், ஆனால், அரசு 167 பேர் இறந்ததாக  மட்டுமே அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்ததாக மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் அரசு 3 பேர் என்கிறது.  இதேபோன்று ஜூன் 4 அரசு செய்தி குறிப்பில், குணமடைந்தவர்கள் 9459, சிகிச்சையில் 9066 பேர் உள்ளனர் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மாநக ராட்சி 9392 பேர் மட்டுமே குணமடைந்துள்ள தாகவும், 8947 சிகிச்சை பெற்று வருவ தாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் ஆட்சியாளர்களின் செயல்பாடு சந்தேகத்தை உருவாக்கு கிறது. எனவே, உண்மையான தகவல் களை வெளியிட வேண்டும். சென்னையில் அதிவேகத்தில் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இறப்பவர்களின் வயது குறைந்து கொண்டே வருகிறது.  இதற்கு முக்கியகாரணம், பரிசோத னைக்கு வருகிறவர்களை கூட மருத்துவ மனைகளில் பரிசோதிக்க மறுக்கிறார்கள். பரந்துபட்ட அளவில் பரிசோதனைகளை நடத்தி, தொற்றையும், தொடர்புகளையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.  அப்போதுதான் தொற்று முற்றிய நிலையில்  மருத்துவமனைக்கு வருவதும், இறப்பதும்  குறையும். எனவே, அரசு உண்மையான தகவல்களை சொல்லி, மக்களிடம் விழிப்பு ணர்வை உருவாக்க வேண்டும்.  என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில்  சென்னையின் பங்கு 68.5 விழுக்காடாக உள்ளது. இந்திய அளவில் மாவட்ட வாரி யாக பார்த்தால் முப்பை, டெல்லிக்கு அடுத்து சென்னை மாநகரத்தில்தான் அதிக  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள 15 மண்ட லங்களில் ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய  மூனறு மண்டலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.  திரு.வி.க.நகர், அண்ணா நகர், அடை யாறு ஆகிய மூன்று மண்டலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயி ரத்தை கடந்துள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 975 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. சென்னையில் பாதிக்கப்  பட்டுள்ளவர்களில் ஆண்கள் 60 விழுக்கா டாகவும், பெண்கள் 40 விழுக்காடாகவும் உள்ளது.