tamilnadu

img

சாம்சங் நிறுவனத்துடன் ரூ.1,588 கோடியில் தமிழக அரசு ஒப்பந்தம்  

முதலமைச்சர் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் ரூ.1,588 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (15.03.2022) சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் பெருகும். சர்வதேச அளவில் சந்தை மதிப்பில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சாம்சங்கின் இந்த முதலீட்டினால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும்.

முன்னதாக சாம்சங் நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தினை அமைத்திட. 2006 ஆம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே வருடத்திற்குள் ஆலை கட்டி முடிக்கப்பட்டு 13.11.2007 அன்று, கருணாநிதியால் திறந்தும் வைக்கப்பட்டது. அந்த முதலீடு நடப்பாண்டில் 1,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 80 லட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 லட்சம் அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 

;