tamilnadu

img

சென்னையில் இருந்து 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தம் 

சென்னையில் இருந்து 7 மாவட்டங்கள் வழியாக பிற மாவட்டங்களுக்கும் செல்லும் அரசு பேருந்துகளின் சேவை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யவுள்ளது.

புயலால், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களையும் கூரை வீடுகள், மண் வீடுகள் உள்பட பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஆம்னி சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


 

;