tamilnadu

img

தங்கம் விலை மீண்டும் 36,000-ஐ தாண்டியது

சென்னை:
ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 36 ஆயிரம் ரூபாயை மீண்டும் தாண்டியுள்ளது.கடந்த 25 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்து 352 ரூபாயாக இருந்தது. இதையடுத்து விலை குறைந்து கடந்த 4 நாள்களாக சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ரூபாய்க்கும் சிறிது அதிகமாக இருந்தது.இந்நிலையில், சனிக் கிழமையன்று (மே 30) தங்கம் விலை மீண்டும் சவரன் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளிக் கிழமை, ஒரு கிராம் தங் கத்தின் 4 ஆயிரத்து 476 ரூபாயாக இருந்தது.

;