உலக மகளிர் தினத்தையொட்டி பெரும்பாக்கம் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சார்பில் `நடை பயணம் (வாக்கத்தான்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “ஆரோக்கியமான பெண்கள் ஆரோக்கியமான குடும்பம்’’’ என்னும் கருப்பொருளை மையமாக நடைபெற்ற இந்த நடை பயணத்தை நடிகை ராதிகா சரத்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேடவாக்கத்தில் துவங்கிய இந்த நடை பயணம் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் முடிவடைந்தது இதில் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலொக் குல்லர், 250க்கும் மேற்பட்ட பெண் மருத்து வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.