tamilnadu

img

முறையாக குடிநீர் வழங்குக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

செங்கல்பட்டு, மே 16-காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் கிராம ஊராட்சி, செல்வி நகர்பகுதியில் கடந்த ஒருமாதமாக முறையாக குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சிநிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செங்கல்பட்டு - பொன்விளைந்த களத்தூர்சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்காததால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மேலும், ஊராட்சி நிர்வாகம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீரை விநியோகம் செய்கின்றனர். எனவே ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததையடுத்து அனைவரும், கலைந்து சென்றனர்.இதேபோல், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவும் அரைமணி நேரம் அல்லது கால் மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடுவதால் போதிய அளவுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் ஆவேசமடைந்த 1,2வது வார்டு மக்கள் காலிக்குடங்களுடன் மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

;