tamilnadu

img

கேங்மேன்களுக்கு பணி வழங்க நீதிமன்ற வழக்கு தடையில்லை..... மின்ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர்  எஸ்.ராஜேந்திரன் பேட்டி....

சென்னை:
கேங்மேன்களுக்கு பணி வழங்க நீதிமன்ற வழக்கை அமைச்சர் தடையாக காட்டுவது சரியல்ல என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின்பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமையன்று (ஜனவரி 2) சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மின்வாரியத்தில் புதியதாக பணியிடங்களை தோற்றுவிக்கும் போது, தொழிற் தகராறு சட்டத்தின்படி 9ஏநோட்டீஸ் அளித்து தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கவேண்டும். அவ்வாறு மின்வாரியம் செய்யவில்லை.கேங்மேன் பணியிடங்களை தோற்றுவிக்கும் அறிவிப்பில், மூன்றுஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது, மேலும், ஒக்கி, கஜா  புயல், சென்னைவெள்ளம் ஆகியவற்றில் பணியாற் றிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றுமின்துறை அமைச்சர் அறிவித்திருந் தார். அதன்படி அமைச்சர் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே, சிஐடியு நீதிமன்றத்திற்கு சென்றது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையிலும், தேர்ச்சி பட்டியல் வெளியிட்டு 14 ஆயிரத்து 954 பேரை தேர்வு செய்தனர். அதில் 10ஆயிரம் பேரை நிரப்புவதாக அறிவித்தனர். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி பணியாணை வழங்காமல் உள்ளனர். கடந்த காலங்களில்நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது  என்ற நிபந்தனையுடன் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.இதனை திசைதிருப்பும் வகையில், 50 சதவீதத்திற்கு மேல் உள்ளகாலிப்பணியிடங்களை ‘ஒர்க்ஸ்கான்ட்ராக்ட்’ என்ற அடிப்படையில்தனியார் மூலம் நிரப்ப வாரியம் உத்தரவிட்டது. வாரியத்தை புறவாசல் வழியாக தனியார்மயமாக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து டிசம்பர் 21 அன்று தொழிற்சங்கங்கள் போராடிரத்து செய்ய வைத்தன. இதன்காரணமாக கேங்மேன், ஒப்பந்த ஊழியர், ஐடிஐ படித்தவர்களை நிரப்புவதில் உள்ள தடை விலக்கப்பட்டுள்ளது.

வாரியத்தில் சுமார் 52 ஆயிரம்காலிப் பணியிடங்கள் உள்ளன.  அதில்23 ஆயிரம் கள உதவியாளர், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்பியாளர் (ஒயர்மேன்) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளை செய்யவே கேங்மேன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, கேங்மேன் களுக்கு பணியாணை வழங்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தடையாகஇருப்பதாக அமைச்சர் கூறுவதில் உண்மையில்லை. எனவே கேங்மேன்களுக்கு பணியாணை வழங்கலாம்.இதனை வலியுறுத்தி வாரியத் தலைவருக்கு மத்திய அமைப்பு கடிதம் கொடுத்துள்ளது. அதில், தேர்வு செய்யப்பட்ட கேங்மேன்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும். இவர்களுக்கு பணியாணை வழங்கியது போக மீதமுள்ள களஉதவியாளர் பணிகளில், விநியோகம், அனல், புனல், பொதுகட்டுமான வட்டம் ஆகியவற்றில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, 22.2.2018 முத்தரப்பு ஒப் பந்தத்தின்படி  380 ரூபாய் தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.தற்போது, வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் 456 ரூபாய், இதர பகுதிகளில் 412 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும். ஐடிஐ படித்த2900 பேரை பணி நியமனம் செய்ய செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரி உள்ளோம்.எனவே, மின்துறை அமைச்சர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டாமல் கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் தி.ஜெய்சங் கர், பொருளாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;