சென்னை பள்ளி மாணவர்களுக்கு இலவச கிட்டப்பார்வை சோதனை
சென்னை, அக். 19- கண் சிகிச்சையில் புகழ்பெற்ற பெயரான மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைகள் சென்னை, குழந்தை களிடையே கிட்டப்பார்வை (Myopia - Near-sightedness) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிய ஊக்குவிக்கவும் இலவச பரி சோதனை முகாமை நடத்தியது. பிஷப் கேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பஞ்சேவ் நிறுவனத் துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், சென்னையில் உள்ள பல்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மருத்துவமனையின் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிசோதனை களை மேற்கொள்ள அதிநவீன நோயறிதல் கருவிகளைப் பயன்படுத்தினர். கிட்டப்பார்வை (Myopia - Near-sighted ness) இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சினையாக உரு வெடுத்து வருகிறது. அண்மைக்கால ஆய்வு களில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தி னரிடையே இதன் பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது . இந்த அதிகரிப்புக்கு, அதிகரித்த திரை நேரம், வெளிப்புற செயல்பாடுகள் குறைவு மற்றும் மரபணுக் காரணிகள் போன்றவை காரணம் என்று மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். தினேஷ் பாலகிருஷ்ணன் கூறினார்.
