tamilnadu

பாலியல் புகாருக்கு இலவச செல்போன்: அரசுக்கு உத்தரவு

சென்னை, ஏப். 9-

கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக் கையை ஏற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப் பட்டது தெரிய வந்தது. இருப்பினும், 2 கி.மீ. துரத்திலுள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி ரங்கநாதனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில், சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி, இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரங் களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த தொலைபேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

;