சென்னை, ஆக.22- தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலை யத்தில் திட்டமிடப்பட்டுள்ள 3-ஆவது அலகின் முக்கிய இயந்திரத் தளவாடங்கள் அண்மையில் கூடங்குளம் வந்தடைந்தன. இதற்கான தொழில் நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்களை வழங்கும் பணியை ரஷ்ய நாட்டின் ஏ.எஸ்.இ. நிறுவனம் ஏற்றுள்ளது. இதையொட்டி, ஏ.எஸ்.இ. வடிவமைத்து, தயாரித்து வழங்க வேண்டிய முக்கிய இயந்திரங்களின் பட்டியல்படி மூன்றாவது அலகுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. ரஷ்ய நாட்டு அரசின் அணுமின் உற்பத்திக் கழகமான ரொசாட்டம் கிளை நிறுவனமான ஏ.எஸ்.இ அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் செய்து தருகிறது. அண்மையில் கொண்டு வரப்பட்ட முக்கிய பாகங்க ளில் - ‘மோல்டன் கோர் கேட்சர்’ எனக் குறிப்பிடப்ப டும் அணு உலை மையப் பகுதியின் தரையில் பொருத்தப்படும் பாதுகாப்பு கவசம், அணு உலைக் குழிக்குள் வைக்கப்படும் பல உதிரி பாகங்கள் , அணு உலை அரணில் வெப்ப த்தைத் தாங்கும் அமைப்பு ஆகியவை இடம்பெற்று ள்ளன.