சென்னை, ஆக.24- தோள்பட்டை முறிவுகள் என்பது உடல்ரீதியாகவும் மற்றும் மனரீதியாகவும் மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. இது முறையாக சிகிச்சையளிக்கப்படா விட்டால், நீண்டகால விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். தோள்பட்டையில் தகடு மற்றும் திருகுகள் கொண்டு முறிவை சரிபடுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் சென்னை கீழ்பாக்கம் லிமா மருத்துவமனை முடநீக்கவியல் குழுவினர், மிகமோசமான தோள்பட்டை முறிவு ஏற்பட்ட 47 வயது நோயாளிக்கு இன்ட்ரா – மெடுல்லா `ஹியூமரல் இம்ப்ளான்ட் எனப்படும் மேற்கை உட்பொருத்து முறையை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் முதல்முறையாக செய்யப்பட்ட முன்னெப்போதும் இல்லாத புதுமையான அறுவைசிகிச்சை இது என்று முதுநிலை முடநீக்கவியல் அறுவைசிகிச்சை மருத்துவரான டாக்டர் ரவி கிருபானந்தன் கூறினார். “பொதுவாகவே, தோள்பட்டை முறிவுகளுக்கு தகடுகளை பொருத்துவதன்மூலம் எலும்புகள் ஒன்றாக நிலை நிறுத்தப்படுகின்றன. இதனால் நோயாளி வாழ் நாள் முழுவதும் அந்தப் பொருளுடன் அல்லது தோள்பட்டை நிலை சரிசெய்யப்படும் வரை அப்படியே வாழ வேண்டியிருக்கும். உள்தோள்பட்டை செயற்கை உறுப்புப் பொருத்துதல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தால் தோள்பட்டைக்கு எந்த பாதிப்பும்ஏற்பாடது. நோயாளியும் மிக விரைவில் இயல்பான பணிகளை மேற்கொள்ளமுடியும் என்று மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ராஜ்குமார் கூறினார்.