tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு

1.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், கடந்த இரண்டு நாட்களாக ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். இத்தொகுதி முழுவதும்  ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அமைச்சர் அர.சக்கரபாணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கிராமங்கள் தோறும் ஏராளமான மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியபட்டியில் நடைபெற்ற பிரச்சாரம்.

2.பிரச்சாரக் களத்தில் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.மூர்த்தி

3.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக அனைத்து கிராமங்களிலும் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியினர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதனன்று கொட்டாம்பட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் வாக்கு சேகரித்த அவருக்கு
மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வு.