tamilnadu

பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு இணையவழி பொறியியல் நுழைவுத் தேர்வு

சென்னை,டிச.5- சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தில் இளங் கலை பாடத்திட்டங்கள், முதுகலை பாடத்திட்டங்கள், பட்டயப்படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் முனை வர் பட்டங்கள் உள்ளன. பொறியியல் தொழில் நுட்பம் மேலாண்மை, கட்டு மான தொழில்நுட்பம், கலை மற்றும் அப்ளைடு அறிவி யல், சுகாதார அறிவியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாண வர்களும் கல்வி பயின்று வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்வி நிறு வனத்தில் வரும் கல்வி யாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். பி.டெக், பிஆர்க், பிடெஸ் ஆகிய படிப்புகளுக்கு இத்தேர்வு நடத்தப்படும் என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் இந்துஸ்தான் பல்கலை கழக துணை வேந்தர் கே.பி ஐசக் கூறினார். இந்த தேர்வானது நாடு முழுவதும் 50 மையங்க ளில் நடத்தப்படும். நுழை வுத்தேர்வு விண்ணப்ப ங்களை இணையதளத்தில் www.hindustanuniv.ac.in இருந்தும் நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். விண்ணப்பங்களை நிரப்பி அனுப்பவேணடிய கடைசி நாள் 2020 ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியாகும். இந்துஸ்தான் கல்வி நிறுவனம் 100க்கம் மேற்பட்ட நாடுகளோடு புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அதன் இயக்குநர் அசோக் வர்கீஸ் கூறினார்.சீனாவின் எஸ்ஐஏஎஸ், ரஷ்யாவின் மாஸ்கோ ஏவியேஷன், பிரிட்டனின் லீட்ஸ், மற்றும் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.