வேலூர், மே 26- நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு கிரா மங்களில் நடைபெறும் திருவிழாக்கள் கச்சேரி களில் பங்கேற்று தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தனர் இந்நிலையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த 2 மாதங்களாக வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தமி ழக அரசு நலவாரியத்தில் பதிவு செய்தவர்க ளுக்கு மட்டும் நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது. நலவாரியத்தில் பெரும்பா லோனார் பதிவு செய்யாத நிலையில் அவர்க ளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவருக்கும் நிவார ணம் வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கரகாட்டம் ஆடிக் கொண்டு, பறை இசை முழங்க ஊர்வலமாக மாவட்ட அமைப்பாளர் மார்ட்டின் தலைமை யில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். அவர்களை காவல் துறையினர் இடைமறித்து கைது செய்தனர். இதுகுறித்து மாநில நிர்வாகி கலையர சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரு டத்தில் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்து, வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வந்தோம். தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளதால், நாட்டுப்புற கலைஞர்கள் வேலையிழந்து வருமானம் இழந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, ஒரு சிலர் வேறு வழியின்றி தற்கொலை முயற்சியும் செய்துள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு மாதங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்றார். கைது செய்யப்பட்டவர்களை தமுஎகச மாவட்டச் செயலாளர் எஸ்.சுரேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆத ரவு தெரிவித்தனர்.