ஜன.27இல் ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் பயணம்
சென்னை,ஜன.23- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.
அங்கு நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கு வதற்கான சாதகமான சூழ்நிலை பற்றி யும் முதல்வர் எடுத்து கூறி, அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். பின்னர், பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
ஆளுநர் ரவி அல்ல ஆர்.எஸ்.எஸ். ரவி :தொல். திருமாவளவன்
சென்னை,ஜன.23- சென்னையில் விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-சின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறார். ஆர்.என்.ரவி முகத்தில் பூசாரிகள் கரியைப் பூசி உள்ளார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை மறைக்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் விழா நடந்துள்ளது. ‘ஜெய் ஸ்ரீராம்’என்று இந்திய மக்களை கோஷமிட வைத்துள்ளனர்.
அயோத்தியில் நடைபெற்றது பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றும் அவலம். அப்பாவி இந்து மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோ தரத்துவம் போன்ற ஜனநாயக மாண்பு கள் சிதைக்கப்பட்டும்.
பாஜக புதிய பாரதம், ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட கொள்கைகள் பார்ப்பனிய தர்மத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை, பொருளா தார வீழ்ச்சி, உலக அரங்கில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள பண மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயல்கிறது. ஜனநாயகத்தின் விழுமியங்களை காக்க வேண்டிய நெருக்கடி இந்திய நாட்டில் ஏற்பட்டுள் ளது.
இந்திய நாடெங்கும் சாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.