tamilnadu

img

பெண்களுக்கு இன்று முதல் பயணச்சீட்டு வழங்கல்...

சென்னை:
அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும்மகளிருக்கு திங்கள்கிழமையன்று முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்றுமுதலமைச்சர் உத்தரவிட்டார். 

நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு திங்கள்கிழமையன்று முதல் இலவச பயண சீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்த பிரிவில், எத்தனைபேர் பயணித்தனர் என்ற,கணக்கை பெறும் வகையில்இந்த சீட்டு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;