tamilnadu

img

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை, ஆக. 23 - கோயம்பேடு தனியார் (ஆம்னி) பேருந்து நிலை யத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து நிலை யத்தில் இருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்து கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பேருந்து கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்த நிலையில், ஞாயி றன்று (ஆக.23) திடீரென  ஏற்பட்ட தீ விபத்தில் 3  பேருந்துகள் முழுவதும்  எரிந்து நாசமாகின. 2  பேருந்துகள் பகுதியளவில்  எரிந்தன. தீ விபத்து காரண மாக பேருந்து நிலைய பகுதி யில் இருந்து கரும்புகை எழும்பியது. விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பேருந்துகள் நீண்ட நாட்க ளாக ஓடாமல் நிறுத்தி வைக் கப்பட்டு, பராமரிக்காமல் விட்டதால் தீ விபத்து ஏற்பட் டதா? வேறு ஏதேனும் கார ணம் உள்ளதா? என்பது பற்றி  காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு ஜூலையில் இதேபோன்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ  விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்  தக்கது.

;