“தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காகவே எனது வாக்கினை செலுத்தி உள்ளேன். மதவாத சக்திகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவருக்கும் இது அவசியமான தேர்தல். மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான மிக முக்கியமான தேர்தல் இது!” என்று திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.