tamilnadu

img

அறிவுசார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும் சென்னை கருத்தரங்கில் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 26- தி லண்டன் பொருளாதார பள்ளி, அரசியல் அறிவியல்,மற்றும் தில்லியை சேர்ந்த இந்திய பொருளாதார மற்றும் நிதி பள்ளி ஆகியவை இணைந்து சென்னையில் கற்றல், கற்பித்தல் மூலமாக இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் கருத்தரங்கை நடத்தின. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற லண்டன் பொருளாதார பள்ளியின் அரசியல் அறிவியல் பிரிவு இணை இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் அபடே பேசுகையில், இந்தக் கருத்தரங்கு மாணவர்களின் திறனை மட்டுமல்ல, ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். இத்தகைய கருத்தரங்கு மூலமாக ஆசிரியர்கள் தங்களின் திறனை பிறருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார். இந்தக் கருத்தரங்கில் இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அன்ட் பைனான்ஸ் நிறுவன அகாடமியின் முதல்வர் டாக்டர் தயாள் வரவேற்புரையாற்றினார். அவர் பேசும்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்துதான் வருங்கால உயர்கல்வி இருக்கிறது. இந்த உண்மையை புரிந்து கொண்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலான பாடத் திட்டங்களை உருவாக்கி, அறிவுசார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலமாக, சமூக மாற்றத்துக்கு வித்திடலாம் என்றார்.அவர் மேலும் பேசுகையில், லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் இந்திய வணிக மற்றும் நிதி பள்ளி ஆகியவை இணைந்து சிறப்பான சமூக அறிவியல் சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கான பாடத் திட்டங்கள் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ் விரு நிறுவனங்களும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, இங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன என்றார்.

;