districts

எந்தப் பிரச்சனையையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் கருத்தரங்கில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா கருத்து

புதுக்கோட்டை, மே 9 - எந்த ஒரு பிரச்சனையையும் அறிவியல் கண்ணோட் டத்துடன் அணுகும்போதுதான் சரியான தீர்வு கிடைக்கும்  என்றார் பொருளாதாரப் பேராசிரியர் வி.வி.ஆத்ரேயா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை ‘அறிவியலும் சமூகமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இதில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பேசுகையில், “கல்வித்துறையிலும், தொழிற்சங்கத்திலும் பணியாற் றும் நீங்கள் உங்களிடமுள்ள தரவுகளைக் கொண்டு அறிவியலைப் பரப்ப வேண்டும். பிரச்சனைகளை அறி வியல் கண்ணோட்டத்துடன் தீர்வு காண வேண்டும். அறிவொளி காலத்தில் பாமர மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டதோடு, அவர்களிடம் அறி வியல் கருத்துகளும் பரப்பப்பட்டன. தற்பொழுது போலி  அறிவியல் பரப்பப்பட்டு வரும் நிலையில் உண்மை யான அறிவியல் விழிப்புணர்வை மீண்டும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் அறிவியல் மன்றங்க ளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். வர லாற்றை அறிவியல்பூர்வமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கலைப்பயணங்கள் மூலமாக அறி வியலை வளர்க்க வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு அறிவியல் பார்வையுடன் தீர்வு காண்பதே சரியாக இருக்கும். தொ டர்ந்து பொதுமக்களிடம் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.  அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீர முத்து தலைமை வகித்தார். கவிஞர் நா.முத்துநிலவன், எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் டி.விமலா நன்றி  கூறினார்.