tamilnadu

img

ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8,700 இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்;

நிறுவனம்: Army Welfare Education Society

மொத்த காலியிடங்கள்: 8,700

 

பணி:

TGT (Trained Graduate Teachers)

PGT (Post Graduate Teacher)

சம்பளம்: சிபிஎஸ்இ விதிமுறையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். இளநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்து மத்திய, மாநில அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் 40க்குள்ளும், 5 ஆண்டுக்கு அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.385. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Army Welfare Education Society நடத்தும் ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் கற்பிக்கும் திறன், கணினி பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.register.cbtexams.in/AWES/Registration என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு நுழைவுச் சீட்டை 10.02.2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர்

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 28.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

;