கனமழை தொடர்பாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறையில் இருந்து அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.