விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்த கோரியும் விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைச் செயலாளர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி உட்பட ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அமைப்பினர் தங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.