இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் “தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை கலங்கரை விளக்கத்தில் இருந்து பல்லாவரம் ரானுவஅலுவலர் குடியிருப்பு வரை சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்றது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.