tamilnadu

img

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் கல்வி பி.சம்பத் பேச்சு

சென்னை, ஆக. 12- ஏழை மாணவர்களை கல்வியி லிருந்து விரட்டும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு கையெழுத்து இயக்கத்தை திரு வொற்றியூரில்  நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்ப திடம் ஞாயிறன்று (ஆக.12) ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு திருவொற்றி யூர்-எண்ணுர் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்.பத்மநாபன் வரவேற்றார். வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கியம், இசக்கி நாகராஜ், பகுதிக்குழு உறுப்பினர் கே.ஆர்.முத்துசாமி, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசியதாவது:- சுதந்திர இந்தியாவில் இது போன்ற மோசமான கல்விக்கொள்கை இதுவரை வந்தது கிடையாது. தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் மயத்தில் லாபம் ஒன்றே நோக்கமாக இருக்கிறது. ஏழை, எளிய தலித், ஒடுக்கப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் ஏற்பாடு தான் இந்த புதிய கல்வி கொள்ளை. இந்தியா என்றால் இந்து என்ற கருத்தை திணிக்க முயல்கிறார்கள். பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் இந்துத்துவா கல்வி முறை புகுத்தப்பட்டு வருகிறது. நாக்பூர் பல்கலைக்கழகம் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இந்திய நிர்மாணத்தில் ஆர்எஸ்எஸ்-இன் பங்கு என்ற தலைப்பில் பாடம் நடத்தப்படுகிறது. இந்திய விடுதலை யில் பங்கேற்காத ஆர்எஸ்எஸ் பற்றி பொய்யான புனைவுகள் செய்யப்படு கிறது. இந்திய விடுதலை போராட்ட த்தில் மகத்தான பங்களிப்பை கம்யூனிஸ்டு இயக்கம் செய்துள்ளது. இதை  யாரேனும் மறுக்க முடியாது. பிரிட்ஷ் ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் ஒரு கம்யூ னிஸ்டு. அமிர்தசரசில் பிரிட்டிஷ் கட்டடத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஒரு சிறுவன் ஏற்றினான். அந்த சிறுவன் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் செயலாளர்  சுர்ஜித். இதை தற்போதுள்ள ஆட்சியா ளர்கள் கல்விமுறை சொல்லு வார்களா?. இவ்வாறு அவர் பேசினார். வட சென்னை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெத்துப்படி வங்களை பகுதிச் செயலாளர்கள் பி.சம்பதிடம் வழங்கினர்.