tamilnadu

img

சென்னை: பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பாஜக அலுவலக ஊழியர் ஜோதிமணி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகம் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில், சண்முகத்திற்கு நெருக்கமான பாஜக அலுவலக ஊழியர் ஜோதிமணி வீட்டிலும்  அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
மேலும், பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், பாஜக தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் ஆகியோரை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 

;