கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இந்தாண்டும் விதவிதமான பிளம் கேக்குகள் தயார் செய்யப்படவுள்ளன. இதை முன்னிட்டு உலர் பழ கலவை தயார் செய்யும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. திரைக்கலைஞர் சக்ஷி அகர்வால், பிஜிபி குழும நிறுவனங்களின் தலைவர் பழனி பெரியசாமி மற்றும் சமையல் கலை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.