மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்விரோத நிதி நிலை அறிக்கையை கண்டித்தும், தனியார்மயக் கொள்கை களை கண்டித்தும் டி.ஆர்.இ.யூ. சென்னை டிவிஷன் சார்பில் பொதுமேலாளர் அலுவலகம் அருகே உதவி பொதுச் செயலாளர் அரிலால் தலைமையில் வெள்ளியன்று (பிப். 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், டிவிஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.