tamilnadu

img

ஏமாற்றப் பார்க்கிறீர்களா? கரும்பு விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை:
ரூ.1836 கோடி கரும்பு பண பாக்கி கேட்டு, வறட்சியில் காய்ந்த கரும்புக்கு இழப்பீடு கேட்டு,ஜூலை 16 - சென்னை கோட்டை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 7.7.2019 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் எம்.சின்னப்பா, தவிசதிருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் வெங்கடேஷ், பலராமன் உட்பட சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரூ.1832 கோடி கரும்பு பண பாக்கி கேட்டு, வறட்சியில் காய்ந்து போன கரும்புக்கு இழப்பீடு கேட்டு,ஜுலை-16 காலை முதல் சென்னை கோட்டை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு விலையில் ரூ.406 கோடி பாக்கி
2018-19ல் அரைத்த கரும்புக்கு மத்திய அரசுஅறிவித்த விலையில் (எப்.ஆர்.பி) தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.281 கோடியும், கூட்டுறவுமற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ.125 கோடியும் ஆக ரூ.406 கோடி பாக்கி வைத்துள்ள னர். கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களுக்குள் மத்திய அரசு அறிவிக்கும் விலையைசர்க்கரை ஆலைகள் எப்.ஆர்.பிஐ தராமல் ரூ.406 கோடி பாக்கி வைத்துள்ளனர். கரும்பு பணத்தை உரிய காலத்தில் சர்க்கரை ஆலை கள் தராததால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர்க்கடனுக்கு வட்டி அப ராத வட்டி கட்டுகின்றனர். புதிய பயிர்க்கடன் வாங்க முடியவில்லை. குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியவில்லை. மருத்துவம், திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவு களுக்கு கூட பணம் இன்றி விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மாநில அரசு விலையில் ரூ.1426 கோடி பாக்கி
2013-14 முதல் 2016-17 வரையிலான நான்குஆண்டு காலத்திற்கு மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலை (எஸ்.ஏ.பி-ஐ) 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் தரவில்லை ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் அவர்கள் பங்கிற்கு ரூ.209 கோடி எஸ்.ஏ.பி பாக்கி வைத்துள்ளனர். மொத்தத்தில் ரூ.1426 கோடி எஸ்.ஏ.பி பாக்கி உள்ளது. மாநில அரசு அறிவித்த விலையை பெற்றுத்தருவது அரசின் பொறுப்பு என்று அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தனர். என்ன ஆயிற்று?

5ஏ லாபப்பங்கிலும் ஏமாற்றம்
2004 முதல் 2009 ஆண்டு வரை தனியார்சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய லாபப் பங்குத் தொகையை (5ஏ) விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு படிரூ.240 கோடி வரை 18 தனியார் சர்க்கரை ஆலைகள் ஒரு லட்சம் கரும்பு விவசாயி களுக்கு தர வேண்டும். இதைத் தராமல் ஏமாற்றப்பார்க்கிறார்கள். நியாயமான வகையிலும் சட்டப்படியும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய கரும்பு பண பாக்கியை வாதாடியும்,போராடியும், இரங்கியும் கேட்டுப் பார்த்தோம். சர்க்கரை ஆலைகள் தரவில்லை.

அம்பிகா, ஆரூரான் ஆலைகளின் மோசடி
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரூ ரான், அம்பிகா சர்க்கரை ஆலைகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள்பெயரில் வங்கிகளில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடனை வாங்கி சர்க்கரை ஆலை எடுத்துக்கொண்டது. வங்கிகள் வட்டியுடன் கடனை கட்டுமாறு விவசாயிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகின்றன. இதுகுறித்து கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ள னர். மோசடி செய்த அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி ராம் தியாகராஜனை காவல்துறை கைது செய்யவில்லை.விவசாயிகள் கரும்பு பணமும் கிடைக்காமல், கடன்காரர்களாக அலைக்கழிக்கப்படு கின்றனர். பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவிவசாயிகள் கடுமையான வறட்சியினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி யினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில்சாகுபடி செய்த கரும்பு காய்ந்து கருகி விட்டது. போட்ட முதல் முழுவதையும் இழந்து  விழிபிதுங்கி நிற்கிறார்கள். எனவே விவசாயி களைப் பாதுகாத்திட, வறட்சியில் காய்ந்த கரும்புக்கு இழப்பீடு கேட்டு, மத்திய அரசு விலையில் எப்.ஆர்.பிபாக்கி ரூ.406 கோடியை உடனடியாக பெற்றுத்தரக் கோரி, மாநில அரசு அறிவித்தவிலையில் (எஸ்.ஏ.பி) உள்ள பாக்கித் தொகை ரூ.1426 கோடியை வழங்கிடக்கோரி, கடந்த ஆண்டு கொடுத்த தைப்போல ஒரு டன் கரும்புக்கு ரூ.200ஐ தீபாவளிபண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்கிட மாநில அரசிடம் வலியுறுத்தி ஜுலை-16 காலை முதல் சென்னை கோட்டை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;