சென்னை,ஜன.23- “திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்கான கதாநாயகனாக மட்டுமல்ல கதாநாயகியாக கூட இருக்க லாம்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை யொட்டி அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு ஆகிய 3 குழுக்களை சமீபத்தில் திமுக தலைமை அறிவித்தது. தேர்தல் ஒருங் கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் குழு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கை தயாரிக் கும் குழுவின் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட குழு உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய கனிமொழி,“ வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்காக திமுக தேர் தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், தொழி லாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக் களை கேட்க உள்ளோம்” என்றார்.
பல்வேறு சமூக அமைப்பு களின் கருத்துக்களை பெறும் வகையில் இம்முறை யும் ஆலோசனை வழங்க மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எந்தெந்த இடங்களுக்கு செல்கிறோம் என்பது தொடர்பான பட்டியலை தயாரித்துள்ளோம். முதல்வரின் ஒப்புதலுக்காக வைத்துள்ளோம் .
எப்போ தும் போல் இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை முக்கிய பங்காக இருக்கும் எனவும் அவர் கூறினார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்த லுக்கான கதாநாயகனாக இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில ளித்த கனிமொழி எம்பி “கதாநாயகியாகக் கூட இருக்கலாம்”என்றார்.