tamilnadu

img

ஆல்கார்கோ நிறுவனம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீரை விநியோகிக்கிறது

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனமான ‘ஆல்கார்கோ’வின் வளாகத்தில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,00,000 லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகிக்கப்படுகிறது. அருகில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக இங்கு விநியோகம் செய்யப்படுகிறது.  சி.எஃப்.எஸ். வளாகத்தில் போர்வெல் அமைக்கப்பட்டு ஆர்.ஓ. ஆலையின் உதவியுடன் குடிநீர் சுத்திகரிக்கப்படு கிறது. இது, வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.