tamilnadu

img

ஆர்ப்பாட்டம்....

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில்  மாநிலம் முழுவதும் உள்ள 88 தொழிற்பயிற்சி நிலையங்களில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அருகே தலைவர் ஜெ.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ரமேஷ், செயலாளர் எம்.பாரிவள்ளல், பொருளாளர் சாலக்குமார், புன்னியகோட்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.