tamilnadu

img

பொது வேலை நிறுத்தக் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக மோடி அரசின் மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து 2020 ஜனவரி 8 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தக் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், எஸ்.பரசுராமன், தொமுச கே.ஆர்.சுப்பிரமணி, பாலகிருஷ்ணன், ஏஐடியுசி சிம்பு தேவன், தேவதாஸ், ஐஎன்டியுசி ஏகாம்பரம், எச்எம்எஸ் சரவணன், கா.வெ.திருப்பதிஆகியோர் மற்றும் பலர் உரையாற்றினர்.

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு  தொமுச மாவட்டப் பேரவை தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், பி.குமார், மின் ஊழியர் மத்திய அமைப்பு  கே.அம்பிகாபதி, அரசு போக்குவரத்துக் கழக எல்பிஎப் கிருஷ்ணன், தண்டபாணி, மின்வாரிய எல்பிஎப் வேல்முருகன்,  எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ஆர்.சிவக்குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஏ.சவுரிராஜன்,எச்எம்எஸ்.மின்வாரிய  ஆர்.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கொள்கைகளை வலியுறுத்தி பேசினர்.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.சாமிநாதன், பி. காத்தவராயன், சி.சரவணன், தொமுச சார்பில் கலைநேசன், ஆறுமுகம், ஏஐடியுசி பரமசிவம், சுப்பிரமணி, கஜேந்திரன், எஸ்டியு காதர்பாஷா, நஸ்ருத்தின் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

ஆம்பூரில் கிராம சாவடி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வ.சீனிவாசன், தேவதாஸ், கோவிந்தசாமி, பரசுராமன், பெருமாள், பரத் பிரபு, சுந்தரம், அருள் சீனிவாசன், ஞானதாஸ், அருள், முருகன், ராஜா, சலாம் உள்ளிட்ட பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

;