tamilnadu

img

ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட பணப்பயன்களை திரும்ப தரக் கோரி ஆர்ப்பாட்டம்

ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட பணப்பயன்களை திரும்ப தரக் கோரி செவ்வாயன்று (ஜூலை 14) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட, தென் சென்னை மாவட்டம்  சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட தலைவர் சுந்தராம்பாள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்  மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலச் செயலாளர் நம்பிராஜன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வினோத் குமார் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தின் நிறைவாக மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமியிடம் தலைவர்கள்  மனு அளித்தனர்.