tamilnadu

மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் திருவொற்றியூரில் 27 இடங்களில் நடைபெற்றது

சென்னை, ஜூலை, 27- மின் கட்டணத்தை ரத்து  செய்யக்கோரி திருவொற்றி யூர் பகுதியில் 27 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனோ ஊர டங்கில், வருமானம் இல்லா மல் தவிக்கும் மக்களிடம் இரண்டு மடங்கு வரையில், மின் கட்டணம் வசூல் செய் வதை நிறுத்த வேண்டும், கேரளாவில் மின் கட்ட ணத்தை 50 சதவீதமாக குறைத்துள்ளதோடு, 5 தவ ணைகளில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தி லும் சலுகையை வழங்க வேண்டும், கொரோனா அசாதா ரண சூழ்நிலையில் அத்தியா வசிய பொருட்களை கட்டுப்  படுத்துதல் தடைச் சட்டத்தை  ரத்து செய்திட வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் திருத்துவது, வேலை நேரம்  அதிகரிப்பது, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிப்பது போன்றவற்றை கைவிட வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை உட னடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திரு வொற்றியூரில் 27 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எர்ணா வூரில் நகரமன்ற முன்னாள்  தலைவர் ஆர்.ஜெயராமன்  கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தியாக ராயபுரத்தில் அம்சா தலை மையிலும், எர்ணாவூரில் பகுதிக்கு குழு உறுப்பினர் கே .வெங்கட்ய்யா தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பகுதிச் செய லாளர் கதிர்வேல், மாவட்  டக்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், கிளை செய லாளர் முஹம்மத், குரு பாதம், குப்பன், சாமிதாஸ்   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;