மத்திய நிதிநிலை அறிக்கையில் சமூக நலத்துறைக்கு நிதி குறைத்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் திட்டம் - 10 மற்றும் 16 அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் மாநில இணைச் செயலாளர் எஸ்.ஹேமப்பிரியா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பேசினர்.