திருவண்ணாமலை,ஜூன் 24- திருவண்ணாமலை மாவட்டத்தில், கை, கால்கள் செயலி ழந்து, வறுமையில் வாடும் பெண், தன்னுடைய வாழ்வாத ராத்தை காக்க தனது தாயாருக்கு ஏதேனும் வேலை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுக்கா வில் உள்ளது காம்பட்டு கிராமம். இங்கு வசிக்கும் கூலி தொழிலாளி ஏழுமலை – ஜீவா ஆகியோரின் மகள் அரி பிரியா (19). இவர் கை,கால்கள் செயல்படாமல் மாற்றுத்திற னாளியாக உள்ளார். இவர் திங்களன்று (ஜூன் 24) பொது மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். எனக்கு இரு கை, கால்களும் செயல்படாமல் உள்ளது. நடக்கமுடியாத நிலையில், முடக்குவதத்தால் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் இருக்கும் இடத்தை விட்டு பிறர் உதவி யில்லாமல் அசையமுடியாது. எனது தந்தை பெயர் ஏழு மலை. கூலி வேலை செய்து வருகிறார். எனது தாயார் பெயர் ஜீவா(35). ஏழ்மை நிலையில் வசித்துவரும் எங்கள் குடும்பத்தில், என்னை கவனித்துக் கொள்வதே, என் தந்தைக்கும் தாய்க்கும் வேலையாக உள்ளது. என்னை பராமரிக்கும் பணியே என் பெற்றோர்கள் இருவ ருக்கும் இருப்பதால், கூலிவேலைக்கு கூட, வெளியில் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். அன்றாட செலவுகளுக்கே, அக்கம்பக்கம் உள்ளவர்களை அணுக வேண்டிய நிலையில் உள்ளனர். எனது தாயார் ஜீவா 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் பேரிடரில் எனது தாயார் ஜீவாவின் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. எனது தாயாருக்கு சத்துணவு மைய உதவியாளர் பணி, அல்லது வேறு ஏதேனும் வேலை வழங்கினால், என்னை பராம ரிக்க ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை மனு அளித்துள் ளேன். இதே கோரிக்கையை வலிறுத்தி கடந்த காலங்களில் இரண்டு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக எனது தாய் ஜீவாவிற்கு, சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி, அல்லது வேறு ஏதேனும் பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.